திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தசரதன், குமார், குமரேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு. 2014ல் முன்விரோதம் காரணமாக விவசாயி ஆனந்தன் என்பவரை அடித்துக் கொலை செய்த வழக்கு. 3 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.40,000 அபராதம் விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.