தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதியின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டுக்கான தகுதித் தேர்வு நடந்தது. அதற்கு அடுத்து தேர்வு நடக்கவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 2024ம் ஆண்டுக்கான தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அறிவித்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.
இந்த அறிவிப்பின்படி நவம்பர் 15, 16ம் தேதிகளில் மேற்கண்ட தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் செப்டம்பர் 8ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைகிறது. இன்று மாலை 5 மணிக்குள் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம்.