நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!
சென்னை: நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்து மரணத்துக்கான இழப்பீட்டை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்கு நிதியுதவி ரூ.20,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண் தொழிலாளர்களுக்கு இயற்கை மரணத்துக்கு நிதியுதவி ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement