தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லட்சங்கள் தரும் மீன்வளர்ப்பு!

பண்ணை சார்ந்த தொழில் களில் லாபத்தை அள்ளித்தரும் தொழிலென்றால் அது மீன் வளர்ப்புதான். ஆடு, கோழி, மாடு போன்றவற்றை வளர்க்கும்போது பராமரிப்பு செலவும், பராமரிக்கும் நேரமும் அதிகம். ஆனால், மீன் வளர்ப்பு அப்படியல்ல. நல்ல தரமான மீன்குஞ்சுகளை வாங்கிவந்து முறைப்படி வளர்த்து, உரிய நேரத்தில் தீவனமும் தேவையான நேரத்தில் கண்காணிப்பும் இருந்தாலே போதும். இந்த மீன் வளர்ப்பில் நல்ல அனுபவம் மட்டுமே முதலீடு. அது இருந்தால் மாதம் முழுவதும் லட்சங்களை அள்ளலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்தான் கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த தயாள். மீன்குஞ்சுகள் வளர்ப்பதும் அதனை விற்பனை செய்வதும்தான் எங்களது தொழில். அப்பா, நான், எனது மகன் என இந்தத் தொழிலை மூன்று தலைமுறையாக செய்து வருகிறோம் என பேச்சைத் தொடங்கினார் பண்ருட்டிக்கு அருகே உள்ள மணப்புத்தூரைச் சேர்ந்த தயாள்.

Advertisement

அப்பா தாமோதரனுக்கு 1987ல் இருந்து 2000 வரை இதுதான் தொழில். வெளியூரில் இருந்து மீன்குஞ்சுகளை வாங்கிவந்து எங்கள் ஊரில் உள்ள ஏரிகளை குத்தகைக்கு எடுத்து, அதில் மீன்களை வளர்ப்பார். அந்த மீன் குஞ்சுகள் பெரிதாக வளர்ந்த பிறகு மொத்தமாக விற்பனை செய்வார். நான் அப்பாவுக்கு உதவியாக சில வேலைகள் செய்து வந்ததுபோக போக்குவரத்து துறையில் ஒரு வேலையிலும் இருந்தேன். பண்ணை பராமரிப்பு, மீன்களுக்கு தீவனம் கொடுப்பது, மீன்குஞ்சுகள் வாங்குவது அதனை வளர்த்து விற்பது என அனைத்தையும் அப்பாதான் செய்வார். அவருக்குத் துணையாக இருந்த நான் அவரைப் போலவே நாமும் இந்த தொழிலை கையில் எடுக்கலாம் என நினைத்தேன். பின், மீன் குஞ்சுகளை மட்டும் வளர்த்து விற்பனை செய்யலாம் என்ற யோசனையோடு இந்த தொழிலை கொஞ்சம் பெரியதாக்கினோம்.

மீன் குஞ்சுகள் மட்டும் வளர்த்து விற்பனை செய்யலாம் எனும்போது, முதலில் காட்டுமன்னார் கோவிலில் இருந்து மீன் குஞ்சுகளை வரவைத்து அதனை வளர்த்து விற்பனை செய்தோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. கிடைத்த லாபத்தில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் 20க்கும் அதிகமான மீன் குட்டைகளை அமைத்தோம். தற்போது அதில்தான் மீன்களை வளர்த்து வருகிறோம் என்றவர் மேலும் தொடந்தார்.தற்போது ஒரு ஏரியில் மட்டுமே பெரிய மீன்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறோம். மீதமுள்ள, 20 குட்டைகளில் மீன்குஞ்சுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறோம். பிறந்த 48 மணிநேரம் மட்டுமேயான மீன் குஞ்சுகளை கொல்கத்தாவில் இருந்து வாங்கி வந்து குட்டையில் 35 நாட்கள் வரை வளர்ப்போம். வாரம் ஒருமுறை மீன்குஞ்சுகள் கொல்கத்தாவில் இருந்து வந்தபடி இருக்கும். அனைத்தையுமே, வேறுவேறு குட்டை களில் வளர்த்து சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை விற்பனை செய்வது மாதிரி பார்த்துக்கொள்வோம்.

அந்த வகையில், வாரவாரம் எப்படியும் 25 லட்சம் மீன்குஞ்சுகள் வரை வாங்கிவந்து அதனை, 35 நாட்கள் குட்டைகளில் வளர்ப்போம். அப்படி வளர்க்கும்போது, வெப்பம், குளிர், உணவு, பராமரிப்பு காரணமாக நிறைய மீன்குஞ்சுகள் இறந்துவிடும். இறந்ததுபோக, சராசரியாக 10 லட்சம் மீன்குஞ்சுகள் மிஞ்சும். அதனை, பத்து நாட்கள், இருபது நாட்கள், 35 நாட்கள் என வேறுவேறு பருவத்தில் உள்ள மீன்குஞ்சுகளை விற்பனை செய்வோம். மீன் குஞ்சுகளுக்கு 15 சென்ட்டில் 20 குட்டைகள் அமைத்துள்ளோம். இந்த குட்டைகளில் வளரும் மீன்களுக்கு தேவையான தீவனத்தை குட்டைக்கு அருகிலேயே தயார் செய்வோம். ஏரியில் வளர்க்கும் மீன்களுக்கு நாங்கள் தீவனமே கொடுப்பது கிடையாது. மீன்களை வாங்கி வந்து ஏறியில் விடுவதற்கு முன்பு ஏரியை முழுவதுமாக சுத்தம் செய்து அதில் பட்டி அமைத்து ஆடுகளை விட்டுவிடுவோம். இந்த ஆடுகளின் புழுக்கை, ஆடுகளுக்கு நாம் தரும் தீவனம் என்று அனைத்தும் ஏரியிலேயே தங்கிவிடும். இதன்பிறகு ஆடுகளை வெளியில் அனுப்பிவிட்டு இதில் தண்ணீரை நிரப்பி இரண்டு வாரங்கள் வரை அப்படியே விட்டுவிடுவோம். ஏரியின் அடிப்பரப்பில் சிறிய செடிகள், புழுக்கள் உருவாக தொடங்கிவிடும். இந்த தருணத்தில் மீன்களை வாங்கி வந்து ஏரியில் விடுவோம். இவை கிட்டதட்ட நான்கிலிருந்து ஆறு மாதத்தில் விற்பனைக்கு தயாராகிடும்.

நன்கு வளர்ந்த மீன்குஞ்சுகளை நேரடியாக வியாபாரிகள் ஏரியிலேயே வாங்கி செல்கின்றனர். இதுபோக ஏரி மீன்கள் மற்றும் மீன்குஞ்சுகளை நாங்கள் ஆர்டர் எடுத்து நேரடியாக டெலி வரியும் செய்து தருகிறோம். ஒரு மாதத்திற்கு 10 லட்சம் மீன்குஞ்சுகள் வரை விற்பனை செய்கிறோம். அப்பா, நான் மற்றும் எனது மகன் என மூன்று தலைமுறையினரும் சேர்ந்து மீன் பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். உழைப்பை மட்டுமே நம்பியதால் நாங்கள் இந்த பண்ணை தொழிலில் சாதிக்க முடிந்தது என்று புன்னகையுடன் கூறினார் தயாள்.

தொடர்புக்கு:

தயாள்- 90470 80792

மாதம் 10 லட்சம் மீன்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலம் 8 லட்சம் வரை வருமானமாக கிடைக்கிறது என்கிறார் தயாள். இதில், மீன்குஞ்சுகள் வாங்கி வந்த செலவு ஒரு லட்சம், பராமரிக்கும் ஆட்களின் ஊதியம், மீன்களை டெலிவரி செய்யும் வண்டிக்கான வாடகை மற்றும் தீவனம் தயார் செய்ய வெளியில் இருந்து வாங்கும் தவிடு, புண்ணாக்கு செலவு என்று ஆறு லட்சம் செலவு. செலவுபோக மாதம் இரண்டு லட்சம் லாபமாக கிடைக்கும்.இதுபோக, ஏரியில் இருக்கும் வளர்ந்த மீன்களை விற்பனை செய்வதன் மூலம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை எங்களுக்கு ரூ.2.5லட்சம் வரை கூடுதல் லாபமும் கிடைக்கிறது என்கிறார் தயாள்.

தீவனச் சோளம்...

கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கப்படும் தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) என்ற ரகம் உயரமாக வளரும் மற்றும் அதிக தீவன மகசூலும் கொடுக்கும். இதனை, இறவைப் பயிராகவோ அல்லது மானாவாரியாகவோ பயிரிடலாம். விதைத்து 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 கிலோ வரை விதை தேவை. ஹெக்டருக்கு 10 டன் தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும். விதைகளை வரிசைக்கு வரிசை 30-40 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு பார்களில் விதைக்கலாம்.விதைத்தவுடன் முதல் நீர் பாசனமும், பின்னர் 3ம் நாள் மறுபாசனமும் பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 60 நாள்களிலிருந்து தொடர்ந்து பூக்கும் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 5 முறை அறுவடை செய்யலாம். இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. சைலேஜ் முறையில் பதப்படுத்துவதற்கு பசுந் தீவன சோளப்பயிரை, சிறுசிறு துண்டுகளாக வெட்டி பக்குவப்படுத்தப்பட்ட முறையில் சேமித்து வைக்கலாம். இந்த பசுந்தீவனத்தை விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்தால் நிலமும் வளம்பெரும் கால்நடைகளுக்கு உண்டாகும் தீவனச்செலவும் குறையும்.

Advertisement