ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி
தம்பதிக்கு கார்த்திகா (8), தனுஷ்கா (4) என்ற 2 மகள்களும் இருந்தனர். பெற்றோர்கள் 4 பேரும் விவசாயிகள் என்பதால் விவசாயம் பார்க்க சென்றுள்ளனர். வீட்டில் சிறுவர்கள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். சிறுவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும், 5வயது சிறுமி அங்கன்வாடியிலும் பயின்று வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து மாலையில் அடையபுலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைதாங்கல் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு ஆடைகளை ஏரிக்கரையோரம் வைத்துவிட்டு குளிக்க ஏரியினுள் இறங்கி உள்ளனர்.
அப்போது ஏரியின் அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வாலிபர்கள், விளையாட்டை முடித்துக்கொண்டு செல்லும்போது சிறுவர்களின் ஆடைகள் மட்டும் கரையில் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் அந்த வாலிபர்கள் ஏரியில் குதித்து தேடியுள்ளனர். அப்ேபாது 4 சிறுவர்களும் ஏரியில் மூழ்கி இறந்துகிடப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரின் சடலத்தையும் வாலிபர்கள் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.