லடாக்கில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை
Advertisement
லடாக்கிற்கு என தனி தேர்வாணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதை தொடர்ந்து ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில் உயர்மட்ட குழுவை அரசு நியமித்தது. இந்த குழு போராட்டக்காரர்களுடன் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த கோரிக்கைகள் தொடர்பான வரைவு முன்மொழிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளி யிடப்படவில்லை.
Advertisement