லடாக்கில் ஹோப் அனலாக் ஆய்வு மையம்: ஆகஸ்ட் 1 முதல் 10 வரை 2 பேர் தங்கி ஆய்வு
லடாக்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாக லடாக்கில் ஹோப் எனப்படும் கோள்கள் ஆய்வுக்கான இமயமலை மையம் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஹோப் திட்டத்துக்காக கடல் மட்டத்தில் இருந்து 4,530 மீட்டர் உயரத்தில் உள்ள லடாக்கில் சோ கர் பள்ளத்தாக்கில் அனலாக் மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. வேற்றுக்கோள்களின் இருக்கும் சுழலை ஒரு கலனில் உருவாக்கி அங்கு தங்கியிருந்து ஆய்வு செய்வதையே அனலாக் ஆய்வு என்கிறார்கள். குறைந்த காற்றழுத்தம், உப்புத்தன்மை கொண்ட நிரந்தர பனித்தளம், அதிக குளிர், அதிக புற ஊதாக் கதிர்களின் தாக்கம் என செவ்வாய் கோளின் தொடக்க கால சூழல் நிலவுவதாலேயே ஹெசோபர் பள்ளத்தாக்கில் ஆய்வு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்க ஆகஸ்ட் 1 முதல் 10 ஆம் தேதி வரை 2 பேர் தங்கி இருந்து ஆய்வு மேற்கொள்ளுவர்கள். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இரண்டு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. 26 அடி விட்டம் கொண்ட கலன் தங்குவதற்காகவும், 16 அடி விட்டம் கொண்ட கலன் ஆய்வுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. நீர் மூலம் தாவரங்களை வளர்ப்பது, சமையல், கழிவறை என அனைத்து வசதிகள் கொண்ட இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உடல் மற்றும் உடற்செயலில் செயல்பாடுகள், குறைந்த ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றால் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்வார்கள். செவ்வாய் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கான முக்கிய மைக் கல் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.