எல்.எண்டத்தூர் ஊராட்சியில் 10 ஆயிரம் பனை விதை நடவு
மதுராந்தகம்: உத்திரமேரூரில் செயல்பட்டுவரும் டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் சுற்று வட்டார பகுதிகளில் பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எல்.எண்டத்தூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றமும் இணைந்து கிளியாற்றங்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற தலைவர் யமுனா குப்புசாமி, துணைத் தலைவர் ராஜலட்சுமி மற்றும் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் செல்வம், ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement