குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Advertisement
கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பேசிய பெருந்தகையாளர். தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45வது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க; அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்.
Advertisement