கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
02:38 PM Jan 11, 2025 IST
Share
தஞ்சை : கும்பகோணம் கோயில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காததால் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி ஆணையருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஜன.27ல் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.