தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாட்டி வதைக்கும் வெப்பம்; மரங்கள் அழிப்பால் பசுமையை இழந்தது குமரி: இயற்கை ஆர்வலர்கள் வேதனை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தை மீண்டும் பசுமையாக்கும் வகையில் அதிகளவில் மரங்கள் நடப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளால் மாவட்டத்தில் அதிக அளவிலான மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாத காலம் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. முன்பு தமிழ்நாட்டில் கோடை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதமான காலநிலையைக் கொண்டிருந்தது. ஆனால், ஓகி புயலால் மரங்கள் அழிக்கப்பட்டதுடன், நான்கு வழிச்சாலை அமைப்பதற்காகவும் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டதால் நிலைமை மாறியுள்ளது.

Advertisement

உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி, ஒரு மரத்தை வெட்டினால் அதற்குப் பதிலாக பத்து மரங்கள் நடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இந்த ஆணையைப் பின்பற்றி மரங்கள் நடப்படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக, நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைப்பதற்காக சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு மாற்றாக, ஒரு மரத்திற்கு பத்து மரங்கள் என்ற விகிதத்தில் இதுவரை எந்த மரமும் நடப்படவில்லை என்கிறார்கள். இத தொடர்பான புள்ளி விபரங்கள் நெடுஞ்சாலை ஆணையத்திடம் இல்லை என கூறப்படுகிறது. ஆகவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக, பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக ஒரு மரத்திற்கு பத்து மரங்கள் என்ற விகிதத்தில் மரங்கள் நடுதல் மற்றும் அவற்றைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, சாலையின் நடுப்பகுதியிலும், இருபுறங்களிலும் ஒரு மரத்திற்கு பத்து மரங்கள் என்ற விகிதத்தில் மரங்கள் நடப்பட்டு, அவை பராமரிக்கப்பட வேண்டும் . இதுமட்டுமல்லாமல், இந்தச் சாலையை பசுமையான சாலையாக மாற்றுவதற்கு அதிக அளவில் மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி, பசுமை கன்னியாகுமரி என அழைக்கப்படுவது உண்டு. இந்த மாவட்டம் காடுகள், கடல், மலைகள் நிறைந்த பகுதி ஆகும். 3 மாதங்கள் மட்டுமே வெயிலை காண முடியும் என்ற நிலை மாறி, தற்போது அக்ேடாபர், நவம்பர் மாதத்தில் கூட கடும் வெப்பத்தை அனுபவிக்கிறோம்.

இதற்கு மிக மிக முக்கிய காரணம் குமரியில் மரங்கள் மிகவும் குறைவானதே ஆகும். எனவே தமிழ்நாடு வனத்துறை, சுற்றலாத்துறை, பேரூராட்சி நிர்வாகம், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து குமரி முழுவதும் சாலையின் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலை, கிராம சாலைகள் என அனைத்து இடங்களிலும் சாலையின் இரண்டு புறங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரித்து மீண்டும் குமரியின் தட்ப வெப்பத்தை பாதுகாக்க வேண்டும். சாலை ஓரத்தில் இருக்கும் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என அனைவரும் சாலை அருகில் பாதிக்காத வகையில் சாலையின் இரண்டு பக்கமும் ஒரு மரம் கண்டிப்பாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பழமையான ஆலமரம் சரிந்தது

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ரேஷன் கடை முன், நூற்றாண்டு பழமையான ஆலமரம் இருந்தது. இன்று காலையில் திடீரென ஆலமரத்தின் ஒரு கிளை பயங்கர சத்தத்துடன் முறிந்தது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் எந்த சேதமும் ஏற்பட வில்லை. இதுவே பகலில் நடந்து இருந்தால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் மரத்தின் கீழ் வழக்கமாக அமர்ந்து இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்றனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

Advertisement