குமரியில் படகு பயணம் ஆன்லைனில் டிக்கெட்: மென்பொருள் தயாராகிறது
போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இது குறித்து நேற்று கன்னியாகுமரி வந்த மாவட்ட கலெக்டர் அழகு மீனா கூறுகையில், படகுதுறையில் கூட்ட நெரிசல் பிரச்னையை தீர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகிக்க தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் மூலம் மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவு பெற்றதும் நேரம் குறிப்பிட்டு டிக்கெட் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் வந்து படகு பயணம் மேற்கொள்ளலாம். மிக குறைந்த காலத்தில் அமல்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.