குமரியில் அனுமதியின்றி செயல்பட்ட தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனத்துக்கு சீல்
கன்னியாகுமரி: தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகியதால், பொட்டலமிடும் விதிமுறைகள் பின்பற்றப்படாத, லேபிள் ஒட்டப்படாத நிலையில் இருக்கும் 507 லிட்டர் தேங்காய் எண்ணெய்-ஐ உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேங்காய் எண்ணெய்யில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனத்தின் விற்பனை நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
Advertisement
Advertisement