திருமணத்திற்கு விடுப்பு கேட்கும் குல்தீப்
Advertisement
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். 30 வயதான இவர், சிறு வயது தோழியான வான்ஷிகா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 4ம்தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. வான்ஷிகா எல்ஐசியில் பணியாற்றி வருகிறார். இந்த மாத இறுதியில் இவர்கள் திருமணம் செய்ய உள்ளனர். இதற்காக குல்தீப் யாதவ் பிசிசிஐயிடம் விடுப்பு கேட்டுள்ளார். இதனால் அவர் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழக்கக்கூடும் என தெரிகிறது.
Advertisement