குலசை கோயிலில் ரூ.5.23 கோடி காணிக்கை
Advertisement
தூத்துக்குடி: பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த செப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அக்.2ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரத்துடன் நிறைவடைந்தது. இவ்விழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடனாக பிரித்த காணிக்கைகளை கோயில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர்.
இதில் நிரந்தர உண்டியல் 18, தசரா தற்காலிக உண்டியல்கள் 75 என மொத்தம் 93 உண்டியல்கள் வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணிகள், கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்றது. உண்டியல் வருவாயாக ரூ.5 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 146 கிடைத்தது. 146 கிராம் தங்கம், 2284.900 கிராம் வெள்ளி, 21 வெளிநாட்டு ரூபாய்தாள் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.
Advertisement