கூடுவாஞ்சேரி அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டை மீட்க கோரிக்கை
Advertisement
இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களை சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு எடுத்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட தனிநபர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, குமிழி ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய சுடுகாட்டு நிலத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட தனிநபர்மீது மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Advertisement