கூடங்குளத்தை போல் இந்தியாவில் பெரிய, சிறிய அணுஉலை அமைக்க தயார்: ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ: சர்வதேச அணு மின் சக்தி அமைப்பின் 69வது மாநாடு வியன்னாவில் கடந்த 15ம் தேதி முதல் இன்று வரை நடக்கிறது. இதில் ரஷ்யாவின் அணு சக்தி நிறுவனமான ரோசாட்டம் இயக்குனர் அலெக்ஸி லிகாச்சோவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இந்திய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
Advertisement
அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, பெரிய மற்றும் சிறிய அணு மின் நிலையங்களை உள்ளூர் மயமாக்குவதில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை ரஷ்யா வழங்க தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு அணுமின் நிலையங்களின் 2,3வது கட்டபணிகளை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர்.
Advertisement