கேடிஎம் மோட்டார் சைக்கிள்கள்
கேடிஎம் நிறுவனம், புதிய, மேம்படுத்தப்பட்ட கேடிஎம் 390 அட்வஞ்சர் எக்ஸ் மற்றும் கேடிஎம் 390 எண்டியூரோ ஆர் ஆகிய மோட்டார் சைக்கிள்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 390 அட்வஞ்சர் எக்ஸ் மோட்டார் சைக்கிள்களில் 399 சிசி 4ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 45 பிஎச்பி கிலோ வாட் பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 39 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. நீண்ட தூர பயணத்துக்கான மோட்டார் சைக்கிள் வாங்குவோருக்கு துவக்க நிலை மாடலாக இது இருக்கும். மேம்படுத்தப்பட்ட இந்த பைக்கில் குரூஸ் கண்ட்ரோல் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளது. ஸ்டிரீட், ரெயின் மற்றும் ஆஃப் ரோடு ஆகிய 3 ரைடிங் மோட்கள் உள்ளன. கார்னரிங் ஏபிஎஸ் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
390 என்டியூரோ ஆர் மோட்டார் சைக்கிளில் 398.63 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 46 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 39 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. சர்வதேச சந்தையில் உள்ள இதே மாடலில் உள்ள சில அம்சங்கள் இதில் உள்ளன. 4.1 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல் உள்ளது. ஷோரூம் விலையாக 390 அட்வஞ்சர் எக்ஸ் சுமார் ரூ.3.03 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.12,000 அதிகம். 390 என்டியூரோ ஆர் சுமார் ரூ.3.54 லட்சம். முந்தைய மாடலை விட சுமார் ரூ.16,000 அதிகம்.