கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு!!
Advertisement
இன்று ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைக்கப்பெற்றுள்ளது.. இக்கொழுமுனையின் எடை 1.292 கி.கி ஆகும். இதன் நீளம் 32 செ.மீ அகலம் 4.5 செ.மீ மற்றும் தடிமன் 3 செ.மீ கொண்டு காணப்படுகின்றது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவாசாயம் மேற்கொள்ள ஏர்கலப்பையில் கொழு முனையாக பயன்பட்டிருக்கலாம். இப் பொருள் கிடைத்த தொல்லியல் சூழலைக் கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாற்றுக் காலமாக இருக்கலாம். முழுமையான ஆய்விற்கு பிறகு எக்காலத்தினை சார்ந்தது என்பதை துல்லியமாக அறிய இயலும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement