கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கிருஷ்ணகிரி: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி சென்றுள்ளார். அங்கு சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் பிரமாண்ட அரசு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அதன் பின்னர் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.