கிருஷ்ணகிரி அருகே சிப்காட்டில் இயங்கி வரும் ஷூ கம்பெனிக்கு ஆள் சேர்ப்பு முகாம்: நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் ஷூ கம்பெனிக்கு நடந்த ஆள் சேர்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் காலனி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 ஆண்கள், பெண்கள் ஆள் சேர்ப்பு பணி நடைபெற்ற நிலையில், இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் பயோ டேட்டா உடன் கம்பெனி முன்பு உள்ள பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கம்பெனியில் இருந்து 8 கிலோமீட்டர் சுற்றியுள்ள நபர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டுவரும் நிலையில், 10ஆம் வகுப்பு மட்டுமே தகுதி இருத்தல் போதும் என அறிவித்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் குவிந்தனர். வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் என கையில் பயோ டேட்டா உடன் கம்பெனி முன்பு இளைஞர்கள் வர துவங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை இப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.