தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது;

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி" என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து வரிசையாகப் பதிய வைத்தும், பார்ப்பவர்களின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய், பழவகைகளைப் படைத்து இறைவனை வழிபட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, சர்வ வல்லமை பொருந்திய எல்லாவற்றிற்கும் ஆதாரமான, இறைவன் திருவடியை சரணடைபவர், பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறுவர் என்கிறது கண்ணன் அருளிய கீதை.

'குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்' என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் எனது உளமார்ந்த 'கிருஷ்ண ஜெயந்தி' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து:

பகவத் கீதையை இந்த உலகிற்கு நல்கிய பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளை "கோகுலாஷ்டமி" என்றும், "கிருஷ்ண ஜெயந்தி" என்றும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இளிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு செயலை செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றும், ஒவ்வொருவரும் தனக்கு அளிக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டுமே தவிர, அதனால் விளையும் பலனில் எவ்வித உரிமையும் கிடையாது என்றும் பகவத் கீதை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, ஒரு செயலை செய்யும்போது அதனால் ஏற்படும் பலனை யோசித்து அந்தச் செயலில் ஈடுபடக்கூடாது என்பதுதான் இதன் பொருள். இந்த உலகில் தர்மம் செழிக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற பல உபதேசங்களை பகவான் கிருஷ்ணர் நமக்கு அளித்து இருக்கிறார்.

பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளைக் கொண்டாடும் இந்த வேளையில் எவ்விதப் பலனையும் எதிர்பாராமால், நாட்டிற்காக, நாட்டு மக்களின் நலன்களுக்காக தர்ம காரியங்களை மேற்கொள்ளவும், ஆணவம், அகங்காரம், பேராசை ஆகிய தீயொழுக்கங்களை விட்டொழித்து அன்பு, அரவணைப்பு, பொறுமை ஆகிய நல்லொழுக்கங்களை வளர்க்கவும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

'நான்' 'எனது' 'என்னால்' என்கிற ஆணவம் நீங்கி, இன்ப துன்பத்தைச் சமமாகக் கொண்டு, அனைத்தையும் இறைவனிடத்தில் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டுமென்ற கீத உபதேசத்தை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், அமைதியும், ஆனந்தமும் தழைத்தோங்கும் என்பதனைத் தெரிவித்து, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related News