கோயம்பேடு சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரம்; ஐஏஎஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு: மேல் முறையீடு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு 25,000 ரூபாயை மூன்று வாரங்களில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.