கோயம்பேடு பூக்களின் விலை திடீர் உயர்வு
சென்னை: இன்று அமாவாசை என்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிலோ மல்லி, ஐஸ் மல்லி ரூ.900ல் இருந்து ரூ.1,200க்கும், முல்லை, ஜாதிமல்லி ரூ.750ல் இருந்து ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.1,300க்கும், சாமந்தி ரூ.160ல் இருந்து ரூ.200க்கும், சம்பங்கி ரூ.100ல் இருந்து ரூ.200க்கும், அரளி பூ ரூ.100ல் இருந்து ரூ.300க்கும், பன்னீர்ரோஸ் ரூ.60ல் இருந்து ரூ.160க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில்,‘ஆடி மாதம் முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. இந்நிலையில், இன்று அமாவாசை என்பதால் அனைத்து பூக்களின் விலை அதிகரித்தது,’என்றார்.
Advertisement
Advertisement