தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு: போலீசார் தீவிர விசாரணை

 

Advertisement

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட் 18வது நம்பர் கேட்டு அருகே அங்காடி நிர்வாகம் சார்பில், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பாதாள சாக்கடையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது திடீரென்று கழிவுநீர் செல்லாமல் தடைப்பட்டு நின்றுள்ளது. இதையடுத்து அந்த அடைப்பு அகற்ற ஊழியர்கள் இறங்கியபோது உள்ளே மனித எலும்பு கூடு கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து சென்றனர்.

இதுபற்றி அங்காடி நிர்வாக அதிகாரி செல்வநாயகம் என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.ஆனால் அவர் வரவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு

போலீசார் வந்து பாதாள சாக்கடையில் கிடைந்த மனித எலும்பு கூட்டை எடுத்தனர். அது ஆணின் எலும்பு கூடா, பெண்ணின் எலும்பு கூடா என்று ஆய்வு செய்வதற்கு மயிலாப்பூரில் உள்ள லேபுக்கு அனுப்பி உள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு எப்படி வந்தது? யாராவது கொலை செய்து பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றார்களா, அந்த உடல் அழுகி எலும்பு கூடாக மாறிவிட்டதா என்று விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’பாதாள சாக்கடையில் எடுக்கப்பட்ட மனித எலும்பு கூட்டால் யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்றனர்.வியாபாரிகள் கூறுகையில், ‘’சமீப காலமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பைக் திருட்டு, செல்போன் திருட்டு, வழிப்பறி, ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு பழ மார்க்கெட் 18ம் நம்பர் கேட் பகுதியில் பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரிக்கவேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News