தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவூரில் சுற்றித்திரிந்த மாடுகளால் விபத்து; உரிமையாளர்களுக்கு அபராதம்: காஞ்சி மாவட்ட நிர்வாகம் அதிரடி

குன்றத்தூர்: குன்றத்தூரில் இருந்து போரூர் செல்ல கோவூர் சாலை பிரதான சாலையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த வாகனங்கள் சாலையில் பயணிக்கின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சமீபகாலமாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து பகுதி மக்கள், காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நேற்று இரவு கோவூர் பிரதான சாலையில் சுற்றித்திரிந்த 17 மாடுகளை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர், மாடுகளை முறையாக வாகனங்களில் ஏற்றி, வாலாஜாபாத்தில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்றனர். மேலும் பிடிபட்ட மாடுகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.2500 அபராதம் விதித்தனர்.

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளுக்கு தலா ரூ.2500 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்ட பிறகு மாடுகளை பெற்றுக்கொள்ளலாம். மீண்டும் இதேநிலை தொடர்ந்தால் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் மட்டுமின்றி, சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதேபோன்று கோவூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பிரதான சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலைக்கு அனுப்பப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் இனிவரும் நாட்களில் மாடுகளால் ஏற்படும் வாகன விபத்து தடுக்கப்படும், வாகன ஓட்டிகளும் பயமின்றி பாதுகாப்பாக பயணிக்க முடியும் என பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News