கோவில்பட்டியில் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளரை தாக்கிய புகாரில் மாணவர் கைது
தூத்துக்குடி: கோவில்பட்டியில் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளரை தாக்கிய புகாரில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாற்றுச் சான்று தர மறுத்ததாக கூறி பேராசிரியரை மாணவர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கூறியதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே கல்லூரியில் இருந்த நாற்காலியை தூக்கி மாணவர் வீசியதில் பேராசிரியர் காயமடைந்தார்.