காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி குடும்பம் கேட்டால் அமேதியை திருப்பி தந்து விடுவேன்
Advertisement
இந்நிலையில் அமேதியின் முசாஃபிர்கானாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் கிஷோரி லால் சர்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பாஜ ஆட்சியில் அமேதி தொகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனம், காகித உற்பத்தி ஆலைகள், பெரும் உணவுப் பூங்கா போன்ற பல நிறுவனங்கள் அமேதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளன. அமேதி - உஞ்சஹார் ரயில் பாதை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அமேதி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரியம். அவர்கள் தொகுதியை அரசியல் ரீதியாக பார்க்கவில்லை அங்குள்ள மக்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நினைக்கின்றனர். விலை மதிப்பற்ற இந்த தொகுதியில் காங்கிரஸ் என்னை நிறுத்தி உள்ளது. அவர்கள் எப்போது கேட்டாலும் நான் தொகுதியை தந்து விடுவேன்” என்று தெரிவித்தார்.
Advertisement