கொள்ளிடம் அருகே தோட்டக்கலைதுறை பயிர்களை கலெக்டர் ஆய்வு
அப்போது, மல்லி பயிர் சாகுபடி செய்த விவசாயி கூறுகையில்; நான் செண்டுமல்லி சாகுபடி செய்ததால் தினசரி வருமானம் கிடைக்கிறது. செண்டுமல்லி வளர்ப்பதனால் பூச்சி நோய் தாக்குதல் குறைந்து பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது.
நான் கொள்ளிடம் வட்டாரத்தில் சொந்தமாக பூக்கடை வைத்துள்ளேன். நான் அறுவடை செய்யும் பூக்களை என் சொந்த கடை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள பூக்கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்து தினசரி நல்ல வருமானம் கிடைக்கிறது.
விவசாயிகள் கூறினார். அதனைத் தொடர்ந்து, கொள்ளிடம் வட்டாரம் முதலைமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறையின் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்தூண் பந்தல் ரூ.30,000-மானியத்தில், விவசாயிகள் பாகல் சாகுபடி செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பார்சல் சாகுபடி விவசாயி கூறுகையில்; காய்கள் நல்ல திறட்சியாகவும் அதிக மகசூல் கிடைக்கிறது. நிரந்தர பந்தல் சாகுபடியால் பராமரிப்பும் இலகுவாக உள்ளது.
பாகல் சாகுபடி எந்த நிலையிலும் நஷ்டத்தை கொடுப்பதில்லை. அதனால் அதிக விவசாயிகள் பாகல் சாகுபடியை விரும்புகின்றனர் என்றார்.
இதில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சந்திர கவிதா, உதவி இயக்குனர் சுரேஷ், தாசில்தார் அருள்ஜோதி, கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சன், உமாசங்கர் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.