தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*அருவிகளில் குளித்து மகிழ்ச்சி

Advertisement

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சீதோசன நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரவில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஜில் என குளிர்ந்த காற்று வீசி வருகிறது. காலை வேளையில் மேகமூட்டத்துடன் சாரல் கட்டி வருகிறது. மலைப்பாதையில் மேகமூட்டங்கள் கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 60 கொண்டை ஊசி வளைவுகளுக்கு மேல் கடுமையான மேகமூட்டம் இருந்து வருகிறது.

விடுமுறை தினமான நேற்று சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். மேலும், அமாவாசையை முன்னிட்டு கரூர், திண்டுக்கல், ஈரோடு பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்திருந்தனர்.

ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில் சுவாமி தரிசனம் செய்தனர்.

அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.பின்னர், தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சி முனையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மாலை வீடு திரும்பும்போது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதியில் உள்ள சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், கமலா ஆரஞ்சு, பலா உள்ளிட்டவற்றை

வாங்கிச் சென்றனர்.

Advertisement

Related News