தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் கால்பந்து ரசிகர்கள் வன்முறை: போலீசார் தடியடி

கொல்கத்தா: கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி வருகை தந்துள்ளார். ‘GOAT இந்தியா டூர் 2025'-ன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். கொல்கத்தாவில் தனது சிலையை காணொலி மூலம் திறந்துவைத்த பின், சால்ட் லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்களை சந்தித்தார். நீண்ட நேரம் காத்திருந்து மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள், நாற்காலிகளை தூக்கி வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

Advertisement

மெஸ்ஸி மேடைக்கு வந்து 20 நிமிடங்கள் ஆகியும் முக்கிய பிரமுகர்கள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். மைதானத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த டெண்டுகளை ரசிகர்கள் சூறையாடினர். கலவரம் நடந்த இடம் போல் கால்பந்து மைதானம் மாறியது. சால்ட் லேக் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய நிலையில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மைதானத்தில் வன்முறையில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே மெஸ்ஸி புறப்பட்டுச் சென்றார்.

Advertisement