தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் வரும் 20ஆம் தேதிக்குள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் வரும் 20ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் "கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின்" இறுதிக்கட்டப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களை அறிவுறுத்தினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தை அமைக்க வேண்டும் என்ற வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழில் முனைவோர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் அவர்களுடைய நல் வழிகாட்டுதலின்படி, ரூபாய் 53 கோடி செலவில் சுமார் 1888 கடைகளும், அந்த கடைகளுடன் கூடிய உணவகங்களும், இந்த வண்ண மீன் வர்த்தக மையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 200, இருசக்கர வாகனங்களுக்கு 200 நிறுத்தும் வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடங்கள், அதோடு மட்டுமல்லாமல், பொதுவான கழிப்பறைகள் — 18 கழிப்பிடங்கள், அதில் 9 பெண்களுக்காகவும், மாற்று திறனாளிகளுக்காக 2 பிரத்தியேக கழிப்பிடங்களும், கீழ்நிலை நீர் தேக்க தொட்டி (5 லட்சம் லிட்டர் கொள்ளளவு), மேல்நிலை நீர் தேக்க தொட்டி (1.35 லட்சம் லிட்டர்), மொத்தம் மூன்று நீர் தேக்க தொட்டிகள் — ஒவ்வொன்றும் 45,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

இந்த வண்ண மீன்கள் உற்பத்தி/வர்த்தக மையம் பயன்பாட்டிற்கு வரும் போது, தொழில் சார்ந்தும், வண்ண மீன் உற்பத்தியாளர்களும் சேர்ந்து, கிட்டத்தட்ட 1000 பேர் பயனடைவார்கள் என்று நம்புகிறோம். இந்த வண்ண மீன்கள் வர்த்தக மையத்தை, இந்த மாதம் 20ஆம் தேதிக்குள், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், உற்பத்தியாளர்களிடம் கடைகளை விருப்பம் தெரிவித்தவர்களுக்கு ஒப்படைத்து, மாத இறுதிக்குள் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவேற்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மொத்தம் 260க்கும் மேற்பட்ட பணிகளை, முதல்வர் தொடர்ந்து, அந்த பணிகளின் நிலையை அறிந்து, விரைவுபடுத்தி மக்களுடைய பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நோக்கில் பணியாற்றி வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த 26 ஆம் தேதி, ஒரே நேரத்தில் ஏழு திட்டங்களை, முதல்வர் செனாய் நகர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்தார். கோயம்பேடு சந்திப்பில் பசுமை பூங்கா, ராமாபுரத்தில் திறந்தவெளி பூங்கா, செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், ஈஸ்வரி நகரில் விளையாட்டு திடல், சென்னை வேளச்சேரியில் மேம்பாலத்தின்கீழ் அழகுபடுத்துதல் பணி, விஜயநகர் பேருந்து நிறுத்தம், செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் இரங்கா நகர் குளத்தை மேம்படுத்துதல் பணி மற்றும் சென்னை தங்கசாலையில் முதல்வர் படைப்பகம் என ஏழு திட்டங்களை ஒரே நேரத்தில் துவக்கி வைத்தார். அதேபோல், முதல்வர், இந்த மாத இறுதிக்குள், ஆர்.கே.நகர், அம்பத்தூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இடங்களில் தற்போது கட்டுமான நிலையில் உள்ள பேருந்து நிலையங்களை துவக்கி வைக்க இருக்கின்றார் என்பது மகிழ்ச்சி அளிக்கின்ற செய்தி.

வாட்டர் பேஷன் ரோடு என அழைக்கப்படும் தண்ணீர் தொட்டி தெருவிலும், ஸ்டான்லி மருத்துவமனை அருகிலுள்ள ஏழ்கிணறு பகுதியில் சுமார் 1590 குடியிருப்புகள் 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு, முதல்வர், அந்த பணிகளுக்கு தேவையான அழுத்தத்துடன் ஈடுபட்டுள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு, திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக மண்டபங்களை பயன்படுத்த முடியும்படி, சென்னை வளர்ச்சி குழுமம், ஆலந்தூர் உட்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் சமுதாய கூடங்கள் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது. அதில், அடுத்த மாதம் நவம்பர் இறுதிக்குள் 4 சமுதாய கூடங்கள், முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன.

அந்த வகையில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், ஜனவரி மாதத்திற்குள் துவக்கப்பட்ட மற்றும் துவங்க உள்ள பணிகளைச் சேர்த்து 75% மேலாக ஜனவரி மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதற்காக, எப்போது நேரம் கிடைக்கிறதோ, அந்த நேரங்களில் துறையின் செயலாளர் அன்பிற்கினிய காகர்லா உஷா, உறுப்பினர் செயலாளர் அன்பிற்கினிய பிரகாஷ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் ந.சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன், ஆணையாளர் குமரகுருபரன், சென்னை மேயர் பிரியா ராஜன், சுகாதாரத் துறை இணை ஆணையாளர் ஜெயசீலன், சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன் மற்றும் மண்டலக் குழுத்தலைவர் ஜெயின் போன்றோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த வண்ண மீன்கள் விற்பனை மையம், இந்த மாதம் 20ஆம் தேதிக்குள், மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற பருவமழை காலங்களில் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பிறகும் மழைநீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளை கண்டறிந்து, ஆண்டாண்டு மழைநீர் கால்வாய் அமைக்கின்ற பெருநகரத்தினுடைய தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது கண்டறியப்பட்ட இடங்களில் கிட்டத்தட்ட 80 சதவிகித இடங்கள் இன்றைக்கு மழைநீர் தேங்காய் வண்ணம் கட்டமைப்புகளை உயர்த்தியிருக்கின்றோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் புரசைவாக்கம், தானா தெரு, அங்காளம்மன் தெரு, பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில், நவடஸ் தெரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கின்ற நிலை. தற்போது அந்த சாலை பகுதி முழுவதுமாக மழைநீர் கால்வாய் அமைக்கின்ற பணி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பருவமழையை, கூடிய விரைவில் எவ்வளவு விரைவாக முடிக்க முடிகிறதோ, அதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். அடுத்த பருவமழைக்கு நிச்சயமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத சூழல் நிலவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், “மிஸ்லிங்க்” என்று சொல்லப்படுகின்ற பல இடங்களில் அந்த பகுதிகளை கண்டறிந்து, கிட்டத்தட்ட வடசென்னையில் இருக்கின்ற கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திரு.வி.க. நகர், துறைமுகம், எழும்பூர் போன்ற பகுதிகளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த “மிஸ்லிங்க்” என்று சொல்லப்படுகின்ற அந்த கால்வாய்களை இணைக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல், பெரிய கால்வாயிகளான கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கேனல் போன்ற சேனல்கள் ஒப்பந்தம் கூறப்பட்டு, தற்போது அந்த கால்வாய்களை மேற்கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆகவே ஒவ்வொரு பருவமழையும் தேங்குகின்ற பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதியின் மேம்பாட்டிற்கு தொடர் நடவடிக்கையாக பெருநகரத்துடைய சென்னை மாநகராட்சி முழு வீச்சோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்களும் நாங்களும் அறிவோம். இயற்கையின் மழை அளவை பொறுத்து பொழிகின்றார். சென்னை மாநகராட்சி எல்லா சவாலையும் சந்திப்பதற்கு, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஏற்கனவே நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் அவர்களும், இந்த துறையின் அமைச்சர் என்பவரும் இணைந்து உரையாட, சென்னை பெருநகரத்துடைய மேயர் கூட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். பருவமழையை எதிர்கொள்வதற்கான முயற்சியாக, தொடர்ந்து கண்காணித்து அந்த பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: “அரண்டவன் கண்ணுக்கும் இருந்தது எல்லாம் பேய்” என்பார்கள். “காமாலை கண்ணுகாரனுக்கு கண்டது எல்லாம் மஞ்சள்” என்பார்கள். பருவமழை பெருமளவில் பெய்கின்ற பொழுது, உயர்தர மக்களுக்கான குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் இந்த (நீர் வடிகால்) போக்குகள் தேவைப்படுகின்றன.“வருமுன் காப்பவன் தான் அறிவாளி” என்ற அவையின் வார்த்தைக்கிணங்க, வரும் என்று கணக்கிட்டு அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த படகுகளை தயார் செய்து வைத்தால் அதற்கும் குறை கூறுவார்கள். வந்த பிறகு தேவை என்றால், “முன்கூட்டியே இதை கையாளவில்லை” என்று அதற்கும் குறை கூறுவார்கள்.

அந்த குறைகளையும் நிறைவு செய்கின்ற அரசுதான் இந்த திராவிட மாடல் அரசு எனும் வகையில், போர்க்கால அடிப்படையில், முதல்வர் முன்னெச்சரிக்கை மேற்கொண்டு திறம்பட, அனைவரும் பாராட்டுதலோடு இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். திருச்செந்தூர் பயணம் குறித்து:இன்னும் ஓரிரு நாளில் நானும் திருச்செந்தூர் செல்ல இருக்கின்றேன். கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து, ஆண்டாண்டு இருக்கின்ற பக்தர்களுடைய தேவைகளையும், கூடுகின்ற எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பக்தர்களின் தேவைகளை அறிந்து அதற்குண்டான கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றோம். இந்த ஆண்டு கூட கந்த சஷ்டிக்கு முன்பாக, அன்னதான கூடத்தையும், சூரசம்கார மண்டபத்தையும், அதேபோல் அங்கே ஏற்கனவே கட்டுமான பணிகள் நடைபெற்ற பல்வேறு பணிகளையும் முதலமைச்சரின் பொற்காலங்களில் திறந்து வைத்திருக்கின்றார்கள்.

இந்த முறை கடந்த முறையைவிட இன்னும் சிறப்பாக பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தர முடியும். ஏனென்றால், பல கட்டுமான பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. திருச்செந்தூரில் போதிய அளவு பக்தர்கள் பெருமளவு வந்தாலும், அதற்கேற்ற வகையில் அனைத்து வசதிகளையும் துறையின் சார்பிலும், மாநகராட்சி சார்பிலும், பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சிறப்பாக இந்த கந்த சஷ்டி பெருவிழாவை கொண்டாடுவோம். 234 தொகுதிகளிலும் வெல்வோம் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் பிரச்சாரம் குறித்து: நல்ல வேலை – அவர் 234 தொகுதிகளையும் எங்களுக்கு என்று சொல்லாமல் விட்டுவிட்டார். பாவம், அவர் கணக்கில் எப்பொழுதும் பிழையாக இருப்பவர். ஆகவே, அவர் கணக்கு பொய் கணக்கு ஆகும். 2026 சட்டமன்ற தேர்தலில் ஏகோபித்த ஆதரவோடு முதலமைச்சர் பெறும் பலத்தோடு, 2026 ஆம் ஆண்டு நிச்சயம் ஆட்சி கட்டிலில் அமர்வார்.

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் குறித்த விவாதம்: அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கின்ற ஆணையும் தேர்தல் ஆணையமே ஆகவே, சொல்லி நீக்கச் சொல்லுங்கள். யார் வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். "சட்டியில் இருந்தால்தானே அங்கே பதில் வரும்" – அதுபோல் ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காகவே சொல்கிறார்கள். ஆகவே, போலி வாக்காளர்களுக்கு தமிழ்நாட்டிலேயே, குறிப்பாக திராவிட ஆட்சியில் இடமே இல்லை இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் ந.சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன், மாநகராட்சி இணை ஆணையாளர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், மண்டலக் குழுத்தலைவர் கூ.பீ.ஜெயின், சிஎம்டிஏ தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், கண்காணிப்புப் பொறியாளர் ராஜன்பாபு, மாமன்ற உறுப்பினர் சுதா தீனதயாளன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Related News