இரண்டாம் போக பாசனத்திற்காக திருநெல்வேலி கொடுமுடியாறு நீர்த்தேக்கம் மற்றும் ஈரோடு பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு!!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 10.11.2025 முதல் 31.03.2026 வரை 142 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள மகிழடி, நம்பித்தலைவன் பட்டயம் ஏர்வாடி, இராஜாக்கள்மங்கலம், வள்ளியூர், தளபதிசமுத்திரம், அச்சம்பாடு, கள்ளிகுளம் ஆகிய பாசன பரப்புகளில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
2025-2026-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களுக்கு 10.11.2025 முதல் 09.03.2026 வரை 120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.