தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீசன் களை கட்டியது; கோடியக்கரையில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

வேதாரண்யம்: வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பறவைகள் குவிந்துள்ளதால் கோடியக்கரையில் இந்தாண்டு சீசன் களை கட்டி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நூழைவு வாயில் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயத்தில் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலமாகும்.தற்போது சீசன் துவங்கி உள்ளதால் ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரில் இருந்து தப்பிக்க கோடியக்கரைக்கு 250க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து குவிந்துள்ளன. செங்கால் நாரை, கூழைக்கிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா, வரி தலை வாத்து, கூனி அரிச்சான் உள்ளிட்ட பறவைகள் பல ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.

Advertisement

குறிப்பாக கூனி அரிச்சான் ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து வந்துள்ளது. அதேபோல், கொசு உள்ளான், பட்டாணி, உப்புக்கொத்தி மூக்கு உள்ளான், சீட்டி உள்ளான், குறு மூக்கு உள்ளான், பெரிய அரிவாள் மூக்கு உள்ளான், மஞ்சள் கால் சட்டித்தலை உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், பட்டைவால் மூக்கன், பச்சைக்கால் உள்ளான், பச்சைக்கால் உருண்டை உள்ளான், கருப்புக்கால் உருண்டை உள்ளான், ஊசிவால் வாத்து, தட்டை அலகு வாத்து உள்ளிட்ட பறவைகளும் குவிந்துள்ளன.

இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் ரம்மியமான சூழலில் பறவைகள் சிறகு அடித்து பறப்பதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். கோடியக்கரையில் தட்பவெப்ப சூழல் பறவைகளுக்கு ஏற்ற வகையில் தற்போது நிலவுவதால், இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என்று மும்பை பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News