கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!
ஈரோடு: கோபி அருகே கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ள நிலையில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கும். கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement