கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சிபிசிஐடி முன் தீபு, உதயகுமார் ஆகிய இருவர் ஆஜர்
மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, உதயகுமார் ஆகியோர் இன்று, கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதேபோல், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய இருவரையும் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கோவை சிபிசிஐடி, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் தீபு 3வது குற்றவாளி.
அதேபோல, ஜம்ஷீர் அலி-4, உதயகுமார்-7, ஜித்தின் ஜாய்-10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி முன் இருவர் ஆஜராகியுள்ளனர். 3வது நபரான கேரளாவைச் சேர்ந்த தீபு விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி முருகவேல் முன்னிலையில் விசாரணைக்கு தீபு ஆஜராகியுள்ளார். இந்த வழக்கில் 7வது நபராக சேர்க்கப்பட்டுள்ள உதயகுமார் என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், தீபு, உதயகுமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.