கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்? சீமான் கேள்வி
ஒவ்வொரு முறையும் வழக்கு போட்டு அந்தந்த உரிமையை பெற வேண்டி இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். கொடநாட்டில் கொலை, கொள்ளையை செய்த சார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த சார் யார், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்த 2 சார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 பேர் செத்தது உண்மை. சுட்டது உண்மை. அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கொடுக்கப்பட்டு உள்ளது. என்றார்.