கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
01:54 PM Aug 14, 2025 IST
நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு உதகை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் 10வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தன் ஜாய் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் சில சாட்சிகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.