கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி மீட்பு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானல் டம் டம் பாறை அருகே கடந்த வாரம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டீசல் லாரியை மீட்கும் பணியால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த 28 ஆம் தேதி வெளியூரில் இருந்து டீசல் ஏற்றி கொடைக்கானலில் இறக்கிவிட்டு மீண்டும் தரைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது டம் டம் பாறை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீசல் லாரி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து விடுமுறைகாரணமாக மலைசாலையில் லாரியை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மலைசாலையில் வாகனங்கள் வரத்து குறைந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை மீட்டுக்கும் பணி நடைபெற்றது. ராட்சத கிரேன் கொண்டு 200 அடி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்கப்பட்டதால் மலைசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மலைசாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் சுமார் ஒரு கிமீ தூரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும் குறிப்பிடதக்கது.