கொடைக்கானல் நகர் பகுதியில் தீர்ந்தது பெட்ரோல்.. ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் speed பெட்ரோல் மட்டும் உள்ளது!!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது பண்டிகை விடுமுறை காலம் வந்ததால் தமிழக மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கடந்த மூன்று நாட்களாக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான விடுதிகள் மற்றும் காட்டேஜ்கள் முழுமை அடைந்த நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் மொத்தம் மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் உள்ளது.
செண்பகனூர், கிளாசிக் மற்றும் 7 ரோடு சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் உள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இந்த மூன்று எரிபொருள் நிலையங்களை நம்பி தான் கொடைக்கானலில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் எரிபொருளை நம்பி உள்ளனர்.
தற்போது இந்த மூன்று எரிபொருள் நிலையங்களிலும் சாதாரண பெட்ரோல் முழுமையாக தீர்ந்தது. இதனால் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். செண்பகனூர் பகுதியில் உள்ள ஒரே ஒரு பெட்ரோல் மையத்தில் speed petrol மற்றும் 7 ரோடு சந்திப்பில் பெட்ரோல் முழுமையாக தீர்ந்த நிலையில் டீசல் மட்டுமே இருக்கிறது, அதுவும் குறைந்த அளவில் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பெட்ரோலை நிரப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.