கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு!!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, கோவையை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 11 பேர் நேற்று முன்தினம் மாலை சுற்றுலா வந்தனர். இவர்கள் பேத்துப்பாறை அருகே உள்ள அஞ்சு வீடு அருவியை பார்க்க சென்ற நிலையில், சிலர் ஆற்றில் குளித்துள்ளனர். இதில், பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் நந்தகுமார் 21, ஆற்றுப்படுகை பகுதியில் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார்.
நீரில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதியில் இருந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என 50 -க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். கொடைக்கானல் மலை பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், மாணவன் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் அருவிப்பகுதியில் தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இறந்த மருத்துவ மாணவர் உடலை தேடிய நிலையில் அருவிப் பகுதியில் நந்தகுமாரின் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. உடலை அருவி கீழ்ப்பகுதியில் இருந்து ஊர் பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் நடை பயணமாக தூக்கி வந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு
கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.