தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

14% பெரிதாகவும், பிரகாசத்துடனும் கொடைக்கானலில் `குளிர் முழு நிலவு’: வியந்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்றிரவு தென்பட்ட `குளிர் முழு நிலவை’ சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான `குளிர் முழு நிலவு’ (FULL COLD MOON) இந்த ஆண்டு டிச.4ம் தேதி, பவுர்ணமியன்று தென்படும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற, மலைகள் சார்ந்த சுற்றுலா தலமான கொடைக்கானலில் `குளிர் முழு நிலவு’ நேற்று இரவு தென்பட்டது. முன்னதாக, நேற்று காலை முதல் சாரல் மழை, அடர்ந்த பனி மூட்டம் என மாறி மாறி சூழல் நிலவி வந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் இரவில் வானில் மேகங்கள் விலகி தெளிவாக காணப்பட்டது. இதையடுத்து,`குளிர் முழு நிலவு’ தென்பட்டது. இது வழக்கத்தைவிட சுமார் 14 சதவீதம் பெரிதாகவும், பிரகாசத்துடனும் காணப்பட்டது. இந்த அரிய நிகழ்வை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

Advertisement

இதுகுறித்து வானிலை ஆர்வலர்கள் கூறுகையில், `தற்போது பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தொலைவு தூரம் 3 லட்சத்து 57 ஆயிரம் கி.மீ, அதாவது, 10 முதல் 14 சதவீதம் வரை குறைந்துள்ளது. பூமிக்கு அருகே நிலவு வந்துள்ளதால் வழக்கத்தைவிட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிகிறது. குளிர் காலமாக டிசம்பர் மாதம் தென்படும் இந்த நிலவை `குளிர் முழு நிலவு’ என்று அழைக்கிறோம். இதற்கு முன்பு கடந்த 2023ம் ஆண்டில்தான் குளிர் முழு நிலவு தோன்றியது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோன்றியுள்ளது. அடுத்து 2028ம் ஆண்டுதான் வானில் இந்த நிகழ்வு ஏற்படும் என்று கூறினர்.

Advertisement

Related News