கொடைக்கானலில் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய கடைகளில் பயங்கர தீ விபத்து!!
கொடைக்கானல்: கொடைக்கானல் சாக்லேட் கடைகளில் அமைத்துள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பதுதான் கல்லறை மேடு. இந்த பகுதியில் கொடைக்கானலுக்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலாப்பயணிகள் தங்களோட வாகனங்களை நிறுத்தி அவர்கள் கொடைக்கானலுக்கு வந்திருக்கும் ஞாபகமாக சாக்லேட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை இந்த பகுதியில் வாங்கி செல்வார்கள். இன்று இந்த பகுதியில் இருக்கக்கூடிய கடையில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தார். . வேலை செய்திருக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த தீ விபத்தில் சுமார் 5 கடைகள் முழுவதுமாக எரிந்து முழுவதுமாக நாசமாக ஆகின. மேலும் இந்த தீ விபத்து ஏற்பதிருக்கும் இந்த இடத்தில் 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய சாலையில் இருக்கக்கூடிய இந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதுனால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அப்பகுதியில் அதிகமான குடியிருப்பு வாசிகள் இருப்பதால் அவர்களை இந்த பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடிய நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த தீ விபத்து காரணமாக கொடைக்கானல் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.