கொடைக்கானலில் விதிமீறி வீடு கட்டுவதாக வழக்கு.. நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீதான நடவடிக்கை என்ன?: ஐகோர்ட் கிளை கேள்வி
பங்களாவுக்கு கொடைக்கானல் நகராட்சியிடம் அனுமதி பெறாமல், விதிகளை பின்பற்றாமல் கட்டிடம் எழுப்பியுள்ளனர். விதிகளை பின்பற்றாமல் கட்டிடம் கட்டுவதால் கொடைக்கானலில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் உள்ள வீடுகள் இடிவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. மேலும், கனரக இயந்திரம் மூலம் மலையில் உள்ள பாறைகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடிகர்கள் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டடங்களின் கட்டுமானபணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்று அரசு வழக்கறிஞர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி நடிகர்கள் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.