அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
சென்னை: அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டில் நடைபெறும் அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், திமுக உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. திமுகவை தொடங்கியவர் அண்ணா, கட்சியை கட்டிக் காத்தவர் கலைஞர். இவ்விழாவிற்கு அறிவு திருவிழா என்று துணை முதலமைச்சர் உதயநிதி பொருத்தமான பெயர் வைத்துள்ளார். இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். திமுகவின் வரலாறு தெரியாமல் மிரட்டி பார்க்கின்றனர். ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுகதான். திராவிடம் வெல்லும்; அதை காலம் சொல்லும்; இது கூடி கலையும் கூட்டம் அல்ல; காலம் தோறும் கூர்தீட்டும் கூட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Advertisement
Advertisement