தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிந்தனையை ஒருமுகப்படுத்தும் கிட்டிப்புள் விளையாட்டு

திறமைக்கேற்ற வாய்ப்புகளை சமூகம் வழங்கும்

Advertisement

என்ற நம்பிக்கையை, சிறுவர்களிடையே

இந்த விளையாட்டு ஏற்படுத்துகிறது!

மழைக்காலம் முடிந்து கோடை தொடங்கும் நாட்களில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று தான் கோட்டிப்புள். இதை கில்லித்தண்டு என்றும் கிட்டிப்புள் என்றும் குறிப்பிடுவார்கள்.

கையால் பிடிப்பதற்கு ஏதுவான தடிமன் உள்ள சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள குச்சியை நுனியில் சீவி, கோட்டியாகப் பயன்படுத்துவர். சீவப்பட்ட நுனிப்பகுதி பட்டை வடிவில் மெலிதாக அமைந்திருக்கும். அதே தடிமன் உள்ள சுமார் அரை அடி நீளமுள்ள குச்சியை இருமுனைகளிலும் கூர்மையாக சீவி, புள்ளாகப் பயன்படுத்துவர்.

எண்ணிக்கை: இரண்டு சிறுவர்கள் முதல் பல சிறுவர்கள் வரை இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் யார் விளையாடுவது என ‘மானமா மழையா’என்று கேட்பதன் மூலம் முடிவு செய்து, முதலில் விளையாட வேண்டிய அணியினர் கோட்டி நுனியால் தரையில் சற்று நீளவாக்கில் சிறு குழி பறித்துக் கொண்டு, அந்தக் குழியின் குறுக்கே புள்ளை வைத்து, கோட்டியின் நுனியால் கெந்த வேண்டும். இரு கால்களைச் சற்று அகற்றி கால்களுக்கு இடையில் புள் அமைந்திருக்கும்படி நின்றுகொண்டு, அதன் பிறகு முன்னோக்கி குனிந்து இரு கால்களுக்கு இடையே புள் செல்லுமாறு பார்த்து கெந்த வேண்டும்.

விளையாடும் முறை: கெந்தப்பட்ட புள் செல்லும் பாதையில் எதிரணியினர் நின்றுகொண்டிருப்பர். தரையில் விழும் முன் புள்ளைக் கையால் பிடித்து விட்டால், கெந்தியவன் ஆட்டமிழப்பான். அவ்வாறு பிடிக்க இயலவில்லை எனில் கெந்தியவன் கோட்டியை குழிக்குக் குறுக்கே வைக்க, எதிரணியினர் புள்ளை எடுத்து குழி மேல் இருக்கும் கோட்டியைக் குறி பார்த்து அடிக்க வேண்டும். அப்படி அடித்துவிட்டால் கெந்தியவன் ஆட்டமிழப்பான். அடிக்கவில்லை எனில், கெந்தியவன் கீழே கிடக்கும் புள்ளைக் கோட்டியால் தட்டி, மேலெழும்பச்செய்து, மீண்டும் தட்டிவிட வேண்டும். இவ்வாறு மூன்று முறை தட்டிய பின், புள் கிடக்கும் இடத்தில் இருந்து குழிவரை எத்தனை கிட்டி என்று தோராயமாக கெந்தியவன் கூறவேண்டும்.

எடுத்துக்காட்டாக ஐம்பது என்று கூறினால், ஐம்பது அடி தூரம் இருக்கும் என எதிரணியினர் கருதினால் ஏற்றுக்கொள்வர். இல்லையெனில் அளந்து பார்ப்பர். அவ்வாறு அளந்து பார்க்கும்போது ஐம்பது கிட்டி நீளம் இல்லையெனில், கெந்தியவன் ஆட்டமிழக்க வேண்டும். மேற்கண்ட மூன்று நிலைகளிலும் ஆட்டமிழக்காமல் வென்றுவிட்டால், ஐம்பது புள்ளிகளும் ஆடிய அணிக்குச் சேரும்.

புள்ளிகள்: விளையாட்டு தொடங்கும்போது எத்தனை புள்ளிகள் சேர்ந்த பிறகு ‘கவாளம்’ என்பதைப் பேசிக் கொள்ள வேண்டும். நூறு, இருநூறு என, ஆயிரம் வரை கூட பேசுவதுண்டு. அவரவர் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் ஏற்ப புள்ளிகளைக் கூறுவர். இவ்வாறு ஒவ்வொரு வரும் விளையாடி தங்கள் அணிக்கு புள்ளிகளை கூட்ட முயற்சி செய்வர். குறிப்பிட்ட புள்ளிகளை ஈட்டிய பின், தோற்ற அணியினர், கடைசியாக புள் கிடக்கும் இடத்திலிருந்து மூச்சு விடாமல் கத்திக்கொண்டு வரவேண்டும்; அல்லது கேலியான குறிப்பு ஒலிகளையோ பாடல்களையோ பாடிக்கொண்டு ஓடி வரவேண்டும். வரும்போது இடையில் மூச்சுவிட்டால், மீண்டும் முதலில் இருந்து ஒலி எழுப்பியபடி வரவேண்டும்.

வட்டார வேறுபாடுகள்: புள்ளிகளைப் பெறும் விதத்தில், வட்டாரத்துக்கு ஏற்ப வேறுபாடுகள் உண்டு. ஒரு சில ஊர்களில் புள்ளைக் கோட்டியால் அடித்து மேலெழும்பச் செய்தவுடன், புள் கீழே விழுவதற்குள் மூன்று முறை, புள்ளில் கோட்டியால் தட்டினால், புள் கிடப்பதற்கும் குழிக்கும் இடையிலான தூரத்தை கோட்டியால் அளப்பதற்கு பதில் புள்ளால் அளந்தால் போதும் என விதி வகுத்துள்ளனர். இதனால் ஒரே ஆட்டத்தில் அதிக புள்ளிகள் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கருவிகள் தயாரிப்பு: இந்த விளையாட்டுக்காகக் கோட்டியையும் புள்ளையும் சிறுவர்கள் தாங்களாகவே வெட்டி, நுனியைக் கத்தியால் சீவி தயார் செய்வார்கள். சிலர் இந்த வேலையை நேர்த்தியாக செய்து முடிப்பதுண்டு. அவர்கள் ஆயுதங்களைக் கையாளும் திறனை சிறுவயதிலேயே பெறுவதற்கு இந்த வகை விளையாட்டுப் பொருட்கள் வழிவகுக்கின்றன. ஒருசில சிறுவர்கள் கோட்டிப்புள் சீவும்போது கை விரல்களை வெட்டி காயம் ஏற்படுத்திக் கொள்வது உண்டு. சிலர் காயம் படாமல் செய்வர்.

உள்ளூர் வளங்கள்: விளையாட்டுப் பொருட்களை உள்ளூர் வளங்களிலிருந்து தயாரிப்பதால், இதற்கென்று பொருள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த விளையாட்டு சிறுவர்களிடையே பல்வேறு திறன்களையும் நற்பண்புகளையும் வளர்ப்பதாக அமைந்துள்ளது.

பயன்கள்: குழியில் இருக்கும் புள்ளைக் கெந்துவதன் மூலம், பொருட்களைக் கையாளும் திறனைப் பெறுகின்றனர். புள்ளால் கோட்டியைக் குறிபார்த்து அடிப்பதன் மூலமும், புள்ளை மேலெழும்பச் செய்து கோட்டியால் அடிப்பதன் மூலமும், நிதானம், சிந்தனையை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், குறி பார்க்கும் திறன் ஆகியவை வளர்கின்றன.

தன் குழுவுக்காகப் புள்ளிகளை ஈட்டித் தருவதன் மூலம், தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னால் இயன்ற நற்பணியைச் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையைத் தோற்றுவிப்பதோடு, குழுவினரோடு இணைந்து செயல்படுவதன் மூலம் ஊருடன் இணைந்து வாழும் பண்பினையும் கற்றுக்கொடுக்கிறது. திறமைக்கேற்ற வாய்ப்புகளை சமூகம் வழங்கும் என்ற நம்பிக்கையை, சிறுவர்களிடையே இந்த விளையாட்டு ஏற்படுத்துகிறது.

- புகழேந்தி

Advertisement