100 மீட்டர் ஓட்டம் விநாடிகளில் கிஷேன் வெற்றி
சிலேஸியா: போலந்தின் சிலேஸியா நகரில் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பாரிஸ் ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் (28), நூலிழையில் முதலிடத்தை தவறவிட்டு 2ம் இடம் பிடித்த ஜமைக்கா வீரர் கிஷேன் தாம்ப்சன் (24) உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் மின்னலாய் பாய்ந்து ஓடிய தாம்ப்சன், பந்தய தூரத்தை 9.87 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த நோவா லைல்ஸ், நேற்றைய போட்டியில் 9.90 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 3ம் இடத்தை அமெரிக்க வீரர் கென்னி பெட்நரேக் (9.96 விநாடி) பிடித்தார்.