தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

'கிங்' படத்தின் படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காயம் அடைந்ததாக தகவல்..!!

Advertisement

மும்பை: 'கிங்' படத்தின் படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஷாருக்கான் பதான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படம், ஆக்சன் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் உள்ள கோல்டன் டோபேக்கோ ஸ்டுடியோவில் தீவிரமான சண்டைக்காட்சியை படமாக்கும்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டண்ட் செய்தபோது, ஷாருக்கானுக்கு தசை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதன் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு தசை பிரண்டுள்ளது என கூறப்படுகிறது. அதனால் ஒரு மாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து, 'கிங்' படத்தின் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தப்படுவதாகவும், அக்டோபர் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.

Advertisement