கைனடிக் கிரீன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Advertisement
கைனடிக் கிரீன், புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் இணையதளங்களில் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில், அடுத்த 18 மாதங்களில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த நிறுவனம் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கைனடிக் ஹோண்டா டிஎக்ஸ் இவி முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
டிஎக்ஸ் இவி தான் முதலில் அறிமுகமாகும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனினும், சோதனை ஓட்ட புகைப்படங்கள் மூலம் இது தெரிய வருகிறது என வாகன சந்தையினர் கூறுகின்றனர்.
Advertisement