நாமக்கல்லில் கிட்னி திருட்டு: மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு தொடர்பாக மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி கொடையாளிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது. புகாரை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Advertisement